சின்னத்தைப் பற்றி

வளர்தமிழ் இயக்கத்தின் சின்னம், தமிழின் தொன்மையையும் தொடர் வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் முதலெழுத்தாகவுள்ள அகரம், வளர்தமிழின் இயக்கத்தின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ளது. மொழிக்கு அகரம் இன்றியமையாதது போல, சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு, வளர்தமிழ் இயக்கத்தின் பங்கும் இன்றியமையாதது என்பதும் மற்றுமொரு விளக்கமாகும்.

தமிழ்மொழியின் தொன்மையையும் சிங்கப்பூரில் தமிழை வளர்த்த முன்னோடிகளை நினைவுகூர்ந்து, நன்றி செலுத்தும் வண்ணமாகவும் அகரத்தின் ஒரு பகுதி, தூரிகையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகர எழுத்தின் மற்றுமொரு பாதி, சதுரக்கட்டங்களைக் கொண்டு, புத்தாக்க வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சதுரக்கட்டங்கள் தமிழ்மொழியில் நவீனத்துவத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளன.

மரபை அரவணைத்து, புத்தாக்கத்தையும் புதிய சிந்தனைகளையும் தமிழ்மொழி வளர்ச்சியில் ஒருங்கிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழி, வாழும் மொழியாக தொடர்ந்து வளர்ச்சியடைய இச்சின்னம் நினைவூட்டலாக அமையப்பெற்றுள்ளது.

About the Logo

Back To Top