முகப்பு > நிகழ்வுகள் > நிகழ்ச்சி பட்டியல்

நிகழ்ச்சி பட்டியல்

23 Apr 2022
2022-TLF---ASTW---Muthamizh-Vizha-2022

முத்தமிழ் விழா 2022

நேரம்: மாலை 6 - இரவு 8

நிகழ்விடம்: Zoom link: http://singaporetamilwriters.com/muthamiz Youtube @ Singapore Tamil Writers

தமிழில் எழுதுவதிலும் பேசுவதிலும் மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதற்காக மாணவர்களுக்காகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் தமிழ்ப் படைப்பிலக்கியத் திறன்களை வளர்ப்பதும், தாய்மொழி அறிவை வளப்படுத்துவதும் போட்டிகளின் முக்கிய நோக்கம். பொதுமக்களுக்கான போட்டிகளின் மூலம், இளம் திறனாளர்களைக் கண்டறிந்து, சிங்கப்பூரில் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிப்பது ஏற்பாட்டாளர்களின் இலக்கு.

View Event +
24 Apr 2022
2022-TLF---STYC---Youths-Innovative-Role-in-Societal-Change

சமுதாய மாற்றத்தில் இளையரின் புத்தாக்கப் பணி

நேரம்: காலை 9.30 - மாலை 5.45

நிகழ்விடம்: Zoom சந்திப்பு எண்: 513 426 7739 கடவு எண்: STYCTLF22

ஆய்வரங்க மாநாட்டில் இளையர், சிங்கப்பூர் சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள் முதலானோர் கலந்துகொண்டு சமுதாய மாற்றத்தில் இளையர்கள் எவ்வாறு புத்தாக்கத்துடன் பங்காற்றமுடியும் என்பது பற்றி பேசலாம்.

View Event +
24 Apr 2022
2022-TLF---Thomson-CC-IAEC---Kalaichelvangal

கலைச்செல்வங்கள் 2022

நேரம்: மாலை 4 - 5.30

நிகழ்விடம்: FaceBook @ Thomson CC IAEC

தாம்சன் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்யும் கலைச்செல்வங்கள் நிகழ்ச்சிக்கு முந்திய ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவ்வாண்டு நிகழ்ச்சியில், காணொளித் துணுக்குகள், பொழுதுபோக்கு அங்கங்கள் ஆகியன இடம்பெறுகின்றன. தமிழ் மொழியின் செழுமையை இளையர்கள் உணரவும் போற்றவும் ஊக்குவிப்பது நிகழ்ச்சியின் நோக்கம்.

View Event +
24 Apr 2022
2022-TLF---AUAA---Nature-and-Life-of-Tamils

இயற்கையும் தமிழர் வாழ்வும்

நேரம்: மாலை 6 - இரவு 8.30

நிகழ்விடம்: Zoom சந்திப்பு எண்: 889 2227 9640 கடவு எண்: 12345

இயற்கையையும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையையும் மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு இந்தப் போட்டி வாய்ப்பளிக்கிறது. பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதிகளில் மனித இனம், இயற்கையின் மீது வரையறையற்ற ஆதிக்கத்தை செலுத்தியதன் விளைவாக எதிர்வினைகளை சந்திக்கத் தொடங்கியுள்ளது. அடிப்படையில் தமிழரின் வாழ்வியலை ஆய்வு செய்தால், இயற்கை குறித்த தமிழறிவு மரபு நம்மை வியப்படையச் செய்யும். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்! இயற்கையை காப்போம்!

View Event +