வாழும் மொழி வாழும் மரபு

முகப்பு > நிகழ்வுகள் > வாழும் மொழி வாழும் மரபு

வாழும் மொழி வாழும் மரபு

தமிழ் மொழி விழா, தெக் வாய் உயர்நிலைப் பள்ளி மற்றும் தேசிய மரபுடைமைக் கழகம் இணைந்து இந்த வாழும் மொழி வாழும் மரபு  சிறப்பு திட்டதில் பணியாற்றினர்.

தெக் வாய் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தி மரபுடைமை பாதைகளின்  தகவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அதை விளக்கி சொல்லும் பண்பாட்டு தூதுவர்களாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டது.
முதலில் 13 மரபுடைமைத் தளங்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் அது சார்ந்த ஆய்வுப் பணிகளை இணையத்தில் மேற்கொண்டனர். ஆங்கிலத்தில் ஆய்வு செய்த தகவல்களத் தெக் வாய் மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடனும் மொழி வல்லுநர் துணையுடனும்  தமிழில் மொழிபெயர்ப்பு செய்தனர்.

அவர்களின் படைப்புகள் தமிழ் முரசின் மாணவர் முரசில் 20 பக்கங்கள் கொண்ட சிறப்பிதழாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
27 ஏப்ரல் 2013, அன்று, தெக் வாய் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பு மரபுடைமைப் பாதைச் சுற்றுலாவை அமைச்சர் திரு.எஸ் ஈஸ்வரன், இந்தியச் சமூகத்தின் முக்கிய தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு நடத்தினர். இவர்களின் இந்தச்சாதனை, செப்டம்பரில் 2013,  கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த தாய்மொழிகளின் கருத்தரங்கில் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது.

வாழும் மொழி வாழும் மரபு சிறப்பு திட்டத்தில் இடம்பெற்ற தளங்களைப் பற்றி தமிழில் படித்து மகிழ இப்பொழுதே பதிவிறக்கம் செய்யவும்.

வாழும் மொழி வாழும் மரபு