முகப்பு > நிகழ்வுகள் > தமிழ் மொழி விழா 2018

தமிழ் மொழி விழா 2018

தமிழ் மொழி விழாவை, தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சின் ஆதரவில் 2000ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட வளர் தமிழ் இயக்கம் முன்நின்று நடத்துகிறது. கல்வித்துறை, முக்கிய சமூக அமைப்புகள், கலைக் குழுக்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் பேராளர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி விழாவை 2007-ம் ஆண்டிலிருந்து அதன் துணை அமைப்புகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்துவருகிறது. இந்த அமைப்புகளின் முக்கிய நிகழ்ச்சியாக விழா இடம் பெற்று வருகிறது. விழாவின் ஓர் அங்கமாக இருப்பதில் மற்ற அமைப்புகளுக்கு இடையேயும் ஆர்வம் வளர்ந்து வருகிறது.

தமிழ் மொழி விழாவின் முக்கிய பங்காளியாக கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு (TLLPC) விளங்குகிறது. மாணவர்களிடையே தமிழ் மொழி பேசப்படுதலையும் கற்றுக்கொள்ளப்படுதலையும் மேம்படுத்துவதிலும், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதிலும் 2006ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தக் குழு கவனம் செலுத்திவருகிறது.