தமிழ் இளையர் விழா 2021

முகப்பு > நிகழ்வுகள் > தமிழ் இளையர் விழா 2021

வளர்தமிழ் இயக்கம் செப்டம்பர் மாதப் பள்ளி விடுமுறையில், 4 முதல் 12 ஆம் தேதி வரை தமிழ் இளையர் விழாவை படைக்கிறது. இந்த அறிமுக மெய்நிகர் விழாவில், சமூகத்தில் உள்ள இளையர்களிடையில் தமிழ் மொழிப் புழக்கத்தை வளர்க்கும் நோக்கத்துடன், மொத்தம் 12 நிகழ்ச்சிகள் இடம்பெறும். வளர்தமிழ் இயக்கம் இந்த அறிமுக முயற்சியை மெய்நிகர் விழாவாக வழங்குவதன் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. சமூகத்தில் உள்ள இளையர்கள் பல்வேறு மொழி, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு பட்டறைகள், விவாதப் போட்டிகள், நகைச்சுவை உள்ளிட்ட பற்பல நிகழ்ச்சிகளில் ஸூம், ஃபேஸ்புக், வலையொளி (யூடியூப்) போன்ற தளங்கள் மூலம் பங்கேற்கலாம். 

இந்த நிகழ்ச்சிகள், "தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்" என்பதை வலியுறுத்துவதோடு, இளையர்கள் தங்களின் தாய்மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வீட்டிலும், அன்றாட வாழ்க்கையிலும் தாய்மொழியைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும். படைக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் மாணவர்களையும், இளையர்களையும், 35 வயதிற்கு உட்பட்டவர்களையும்  இலக்காகக் கொண்டிருக்கும்.

நிகழ்ச்சி பட்டியல்