தமிழ்மொழி விழா 2023

 

Tamil Language Festival 2023 will take place from 1 - 30 April 2023.

 

The theme for Tamil Language Festival will henceforth adopt an alphabetic approach beginning with the Tamil alphabet, ‘அ’ for 2023.

 

Vote for your favourite theme now. Voting closes on Monday, 26 September 2022.

 

Voting link: http://etc.ch/oajC

 

புத்தாக்கம் என்ற கருப்பொருளுடன் தமிழ்மொழி விழா 2022 நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. அந்தக் கருப்பொருள் அனைத்து நிகழ்ச்சி உருவாக்கத்திற்கும் ஒரு நல்ல வழிகாட்டியாய் அமைந்திருந்தது. அதனால் இனிவரும் ஆண்டுகளிலும் புதுப்புது கருப்பொருள்களுடன் தமிழ்மொழி விழாவைக் கொண்டாட வளர்தமிழ் இயக்கம் விரும்புகிறது. எந்த அடிப்படையில் கருப்பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சிந்தித்தபோது, இது தமிழ்மொழி விழா என்பதால் அகர வரிசையில் அதைச் செய்தால் பொருத்தமாக இருக்கும் எனத் தீர்மானித்தோம். அதன்படி, 2023ன் கருப்பொருள் 'அ' எனத் தொடங்கும். 2024ல் ‘ஆ’ எனத் தொடங்கும். இவ்வாறே உயிரெழுத்துகளின் வரிசையில் கருப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பது நமது விழாவிற்கு மேலும் உயிரூட்டும் என நம்புகிறோம்.

 

கருப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களின் பங்களிப்பையும் நாடுகிறோம். அடுத்த ஆண்டுக்காக மூன்று தெரிவுகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுங்கள். அதிகமானோர் விரும்பும் தேர்வே அடுத்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்படும். நன்றி.

 

1. அகம் (the inside, inner and internal) - உள்ளிருக்கும் ஒன்றை உணர்த்தும் உன்னதச் சொல். தமிழ் மொழியின் உள்ளடக்கம், அது உருவாக்கும் உள்ளுணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளை உருவாக்கலாம்.

 

2. அழகு (beauty, exquisite and magnificent) - கண்ணையும் கருத்தையும் கவரும் எதனையும் அழகு என்று வகைப்படுத்தலாம். தமிழ் மொழியின் அழகு எவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது? எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தலாம்?

 

3. அன்பு (affection, love and kindness)- மனதில் மடைதிறந்தோடும் மாசில்லாத உணர்வு. அன்பு என்ற பண்பை நமது மொழி எவ்வாறெல்லாம் வலியுறுத்துகிறது?
Back To Top