தீவு முழுவதும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்! தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஓங்கச் செய்வதே வளர்தமிழ் இயக்கத்தின் தலையாய நோக்கமாகும்.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. தமிழ்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தவும் பள்ளிகளில் தமிழ்மொழி கற்றலை ஆதரிக்கவும் தமிழ்ச் சமூக அமைப்புகளின் ஆதரவுடன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.