சொல்லகராதி

Educational Terms
Englishதமிழ்
Abacus மணிச்சட்டம்
Ability-driven Education திறன் சார்ந்த கல்வி
Academic degree பட்டக்கல்வி
Academic Value-Added கல்வி மதிப்புயர்வு
Academy கலைக்கழகம்
Accent ஒலியழுத்தம்
Acceptable file formats ஏற்புடைய கோப்பு வடிவங்கள்
Accuracy துல்லியம்
Achievement Awards சாதனை விருதுகள்
Achievement - Based Education சாதனைசார் கல்வி (அடைவுநிலைசார்ந்த கல்வி)
Acquisition கைவரப்பெறுதல்
Action research செயலாய்வு
Active learning முனைப்புமிகு கற்றல்
Active personality செயல்திறமுடைய ஆளுமை
Active state இயங்குநிலை
Activities & achievements நடவடிக்கைகளும் சாதனைகளும்
Adaptability தழுவல் இயல்பு / சூழலுக்கேற்ப மாறுந்தன்மை
Adjusted learning இணக்கக் கற்றல்
Administrative records நிர்வாக ஆவணங்கள்
Admission நுழைவுச் சேர்க்கை
Adolescent வளரிளம் பருவம்
Adult education முதிர்வயதுடையோர் கல்வி
Adult literacy முதிர்வயதுடையோர் எழுத்தறிவு
Advanced elective modules மேனிலை விருப்பப் பாடத்தொகுதிகள்
Advanced Placement Examination மேனிலைத் தகுதிநியமனத் தேர்வு
Aesthetic முருகியல் / அழகியல் / கவின்கலைகள்
Affective Factors மனவுணர்வுக் கூறுகள்
Affective meaning மனவுணர்வுப் பொருள்
Age-appropriate வயதுக்கு ஏற்ற / வயதுக்குப் பொருந்திய / வயதுக்கு உகந்த
Agricultural education விவசாயக் கல்வி / வேளாண் கல்வி
Aims and objectives குறிக்கோள்களும் நோக்கங்களும்
Algebra குறிக்கணக்கு
Alphabetic method நெடுங்கணக்கு முறை
Ambiguity தெளிவின்மை / குழப்பம்
Ambiguous தெளிவற்ற / ஐயப்பாடான / தெளிவற்ற
Analogy ஒப்புவமை
Analytic method பகுப்பு முறை
Anatomy உடற்கூற்றியல்
Anecdote வாழ்க்கைத் துணுக்கு
Anniversary ஆண்டு விழா / ஆண்டு நினைவுநாள்
Announcements அறிவிப்புகள்
Anthropology மானுடவியல்
App செயலி
Appeal முறையீடு
Application விண்ணப்பம் / மனு
Applied and practice-oriented learning பயன்பாடு மற்றும் செயல்முறை சார்ந்த கற்றல்
Applied graded subjects செயல்முறை தரநிலைப்படுத்தப்பட்ட பாடங்கள்
Apprenticeship தொழில் பயில்நிலை
Approach அணுகுமுறை
Approach to teaching கற்பித்தல் அணுகுமுறை
Appropriate assessment பொருத்தமான மதிப்பீடு / ஏற்புடைய மதிப்பீடு
Appropriate level பொருத்தமான நிலை
Appropriate strategies பொருத்தமான உத்திகள்
Appropriate syllabus materials ஏற்புடைய பாடத்திட்ட வளங்கள்
Aptitude இயல்புத்திறன்
Archaic வழக்கொழிந்த
Articulation ஒலிப்பு, எடுத்துரைக்கும் ஆற்றல்
Artificial செயற்கையான
Assessment மதிப்பீடு
Assessment and examinations மதிப்பீடுகளும் தேர்வுகளும்
Assessment for Learning கற்றலுக்கான மதிப்பீடு
Assessment formats மதிப்பீட்டு அமைப்புமுறைகள்
Assessment methods மதிப்பீட்டு முறைகள்
Assessment of Learning கற்றலை மதிப்பிடுதல்
Assignment ஒப்படைப்பு
Assistive Technology Devices தொழில்நுட்பத்திற்கான துணைக்கருவிகள்
Assumption ஊகம், அனுமானம்
Asynchronous learning காலத்திற்குப் பொருந்தாத கற்றல்
Attendance வருகை (பதிவு)
Attention கவனம்
Attitude மனப்பாங்கு / மனப்போக்கு
Attribute இயற்பண்பு
Audibility கேட்கப்படும் தன்மை, ஓசைத்தெளிவு
Audio clip ஒலிப் பகுதி
Audio-lingual teaching method கேட்டு-மொழிதல் கற்பித்தல் முறை
Audio recording ஒலிப் பதிவு
Audio-visual aids ஒலி-ஒளிக் கருவிகள் / கேள்வி-காட்சிக் கருவிகள்
Audio-visual approach ஒலி-ஒளி அணுகுமுறை
Aural and oral கேட்டலும் பேசுதலும்
Authentic நம்பகமான / உண்மையான
Authentic materials நடைமுறைக்கு எற்புடைய வளங்கள்
Autism தொடர்புத்திறன் குறைபாடு
Automatic தானியங்கு
Auxiliary துணை
Babbling நாக்குளறல் / உளறல்
Baby talk மழலை மொழி
Basic education அடிப்படைக் கல்வி / தொடக்கக் கல்வி / ஆதாரக் கல்வி
Basic Operations அடிப்படைச் செயற்பாடுகள்
Behaviourism நடத்தையியல்
Best Practice Awards சிறந்த செயல் விருதுகள்
Bias in education ஒருசார்புநிலைக் கல்வி
Bibliography நூற்றொகுதி, நூற்பட்டியல்
Bilingual இருமொழி
Bilingual Education இருமொழிக் கல்வி
Binary இருகூறு
Biography வாழ்க்கை வரலாறு
Biology உயிரியல்
Bit துணுக்கு
Blackboard கரும்பலகை
Blasphemy சமய நிந்தனை
Blended learning கலவைமுறைக் கற்றல்
Blog வலைப்பூ
Booth காட்சிக்கூடம் / சாவடி
Botany தாவரவியல்
Boundary எல்லை
Boyhood பிள்ளைப்பருவம்
Boy Scout இளஞ்சாரணர்
Broadcast ஒலிபரப்பு
Browse மேலோட்டமாகப் பார்வையிடுதல் / இணையத்தில் தேடுதல்
Cadet பயிற்சிப் படைஞர்
Camp-fire சுடரொளி முகாம்
Cancellation நீக்கம் / ரத்து
Capitation grant பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை
Category வகைப்பாடு
Causative காரணி
Centralised qualifying test மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனை
Centre of Excellence for Professional Development நிபுணத்துவத் தொழில் மேம்பாட்டிற்கான உன்னத நிலையம்
Changing language environment மாறிவரும் மொழிச்சூழல்
Chapter இயல் / அத்தியாயம்
Character பண்பியல்பு; கதாபாத்திரம்
Character Development பண்புநல வளர்ச்சி
Character Development Programme நற்பண்பு வளர்ச்சித் திட்டம்
Characteristics குணத்திரள், பண்பியல்புகள்
Chart கருத்துப்படம்
Chat இன்னுரையாடல் / அளவளாவுதல்
Childhood குழந்தைப்பருவம்
Chinese (Special Programme) சீனமொழி (சிறப்புத் திட்டம்)
Choral recitation குழுவாக ஓதல்
Civics குடியியல்
Civics and Moral Education குடியியலும் அறநெறிக் கல்வியும்
Classical learning மரபுநிலைசார் கற்றல்
Cliche நைந்துபோன சொற்றொடர் / நைந்துபோன கருத்து
Cluster Superintendent குழுமப் பொறுப்பதிகாரி
Cluster teachers குழும ஆசிரியர்கள்
Co-Curricular Activities (CCA) இணைப்பாட நடவடிக்கைகள்
Co-Curricular Programme Executives இணைப்பாடத்திட்ட நிர்வாகிகள்
Code mixing மொழிக் கலப்பு
Code switching மொழித் தாவல்
Co-education இருபாலர் கல்வி
Cognitive development அறிவுசார் வளர்ச்சி
Cognitive meaning அறிவுசார் பொருள்
Cognitive theory அறிவுசார் கோட்பாடு
Coinage ஆக்கம், புத்தாக்கம்
Coincidence தற்செயலான நிகழ்வு
Colloquial பேச்சுவழக்கு
Combined humanities இணை மானிடவியல்
Comment கருத்துரை
Commentary விமர்சனம்; விளக்கவுரை; வருணனை
Committee on Pre-School Education பாலர் பள்ளிக் கல்விக்குழு
Common language பொது மொழி
Communication கருத்துப்பரிமாற்றம்
Communication channel தகவல் பரிமாற்ற வழி
Community Involvement Programme சமூக ஈடுபாட்டுத் திட்டம்
Community Organisations சமூக அமைப்புகள்
Comparison ஒப்புமை
Competence ஆற்றல்
Competition போட்டி
Composition கட்டுரை
Compound கூட்டுப்பொருள் / சேர்மானம், சுற்றுச்சுவர்
Comprehension text கருத்தறிதல் பனுவல்
Compulsory கட்டாயம்
Computer-based learning கணினிவழிக் கற்றல்
Concentration ஒருமுகப்படுத்தல்
Concept கருத்துரு
Concession சலுகை
Conclusion முடிவு
Concord இயைபு
Concrete concept பருமைக் கருத்துரு
Conditional கட்டுப்பாட்டிற்குட்பட்ட / நிபந்தனைக்குட்பட்ட
Conduct நடத்தை
Confidence உறுதி; தன்னம்பிக்கை
Confusion குழப்பம்
Connection தொடர்பு
Conservation பாதுகாத்தல்
Consonant மெய்யெழுத்து
Contemporary சமகால
Content பொருளடக்கம் / உள்ளடக்கம்
Content analysis உள்ளடக்கப் பகுப்பாய்வு
Context சூழல்
Contextualised questions சூழமைவு வினாக்கள்
Contextual meaning சூழற்பொருள்
Continuation Schools தொடர்நிலைப் பள்ளிகள்
Continuing education தொடர் கல்வி
Contract Adjunct Teachers ஒப்பந்த இணை ஆசிரியர்கள்
Contrast மாறுபாடு / முரண்
Control Room கட்டுப்பாட்டு அறை
Conundrum புதிர்வினா / தீர்க்கவியலாச் சிக்கல்
Convention மரபு / மாநாடு
Conversation உரையாடல்
Conversion மாற்றம்
Co-occurence இணைநிகழ்வு
Cooperative Learning கூடிக்கற்றல்
Correction திருத்தம்
Correlation ஒன்று மற்றொன்றுடனான தொடர்புநிலை
Correspondence course அஞ்சல்வழிக் கல்வி
Creative skill படைப்பாக்கத் திறன்
Creative thinking படைப்பாக்கச் சிந்தனை
Cross-cultural communication பல்லினக் கலாசாரத் தொடர்பு
Cryptography மறைகுறியீட்டு முறை
Cryptonalyst மறைகுறியீட்டு முறை ஆய்வர்
Cultural content பண்பாட்டுப் பொருண்மை
Cultural setting பண்பாட்டுப் பின்னணி
Culture பண்பாடு / கலாசாரம்
Curiosity விருப்பார்வம் / அறியும் ஆர்வம்
Curriculum framework பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம்
Curriculum literacy பாடத்திட்ட எழுத்தறிவு 
Curriculum materials பாடத்திட்டக் கருவிகள்
Curriculum plan பாடக்கலைத்திட்டம்
Customised teaching approaches தனிப்பயனுக்கான கற்பித்தல் அணுகுமுறைகள்
Data தரவு / தகவல்
Data collection தரவுச்சேர்க்கை
Day dream பகற்கனவு
Dead language வழக்கொழிந்த மொழி
Dean கல்வி நிலைய துறைத் தலைவர்; பல்கலைக்கழகப் புல முதல்வர்
Design & technology வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
Desired Outcomes விரும்பத்தக்க விளைவுகள்
Destination சேருமிடம்
Detoxification நச்சு நீக்கம், நச்சுமுறித்தல், நச்சகற்றல்
Development Awards வளர்ச்சிக்கான விருதுகள்
Diagnostic Test திறனறி சோதனை
Dialect கிளைமொழி
Different abilities வேறுபட்ட / மாறுபட்ட திறமைகள்
Differentiate வேறுபடுத்துதல்
Differentiated Instruction வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்
Diglossia இரட்டை வழக்கு
Diploma In Education பட்டயக் கல்வி
Direct method நேர்முறை
Director இயக்குநர்
Directory விவரத் திரட்டு
Direct polytechnic admissions பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி நேரடிச் சேர்க்கை
Direct School Admission பள்ளி நேரடிச் சேர்க்கை
Disciple சீடர் / கொள்கை பின்பற்றுபவர்
Discontinuation தொடராதிருத்தல்
Discourse கருத்தாடல்
Discovery கண்டுபிடிப்பு
Discrete channel தனித்தியங்கும் வழி
Discrete elements தனித்தியங்கும் கூறுகள் / சூழல் சாரா கூறுகள்
Discussions கலந்துரையாடல்கள்
Displacement இடமாற்றம்
Disposition உளநிலை / பண்பியல்பு
Disquisition விரிவான கட்டுரை (ஆராய்ச்சி)
Distinction தனிச்சிறப்பு
Distinctive தனிச்சிறப்பிற்குரிய
Distortion of speech பேச்சுச் சிதைவு / சீரற்ற பேச்சு
Diverse மாறுபட்ட
Diverse home language environment மாறுபட்ட வீட்டுமொழிச் சூழல்
Documents ஆவணங்கள்
Domain களம்
Dominant home language குடும்பத்தில் அதிகம் பேசப்படும் மொழி
Dominant language அதிகம் பேசப்படும் மொழி
Dramatization நாடகவடிவம்
Drill தொடர்பயிற்சி, இடைவிடாப்பயிற்சி
Due date காலக்கெடு / இறுதிநாள்
Duration கால அளவு
Echo எதிரொலி
Economics பொருளியல்
Educability கற்கும் தகைமை / கற்கும் திறமை
Educate கற்பித்தல், பயிற்சியளித்தல்
Educational qualification கல்வித் தகுதி
Education Leadership Development Centre கல்வித் தலைமைத்துவ மேம்பாட்டு நிலையம்
Education Policy கல்விக் கொள்கை
Edusave Award ‘எடுசேவ்’ விருது
Edusave Scholarship ‘எடுசேவ்’ உபகாரச் சம்பளம்
Effective பயன்முனைப்புமிக்க
Elective தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம்
Elective modules தெரிவு பாடத்தொகுதிகள் / விருப்பப் பாடத்தொகுதிகள் 
Eligible தகுதியுடைய / தகவுடைய
Elocution சொல்லாற்றல் / நாவன்மை
Eloquence சொல்வன்மை
Email address மின்னஞ்சல் முகவரி
Embedding பதிக்கப்பெற்ற
Embroidery சித்திரத்தையற்கலை
Emotion மனவுணர்வு
Emotional involvement உணர்வுபூர்வ ஈடுபாடு
Emotive speech உணர்வைத் தூண்டும் பேச்சு
Emphasis அழுத்தம் / வலியுறுத்தல்
Empirical research பட்டறிவு சார்ந்த ஆய்வு / நம்பகமான ஆய்வு
Employability Skills System வேலை வாய்ப்புகளுக்கான திறன் திட்டம்
Enabling Masterplan இயலச்செய்யும் பெருந்திட்டம், உடற்குறையுள்ளோர்க்கான பெருந்திட்டம்
Encoding குறியீடாக்கம்
Encyclopaedia கலைக்களஞ்சியம்
Engaging and realistic contexts ஈடுபாடுமிக்க இயல்பான சூழ்நிலை
Engaging hearts & enriching minds உள்ளத்தை ஈடுபடுத்து; எண்ணத்தை வளப்படுத்து
Engaging learning activities ஆர்வத்துடன் ஈடுபடச்செய்யும் கற்றல் நடவடிக்கைகள்
Engaging pedagogy ஆர்வமூட்டும் கற்பித்தல்முறை (கற்பித்தலியல்)
Enhanced Vocational Training Programme மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தொழில் பயிற்சித் திட்டம்
Enriching learning experiences வளமூட்டும் கற்றல் அனுபவங்கள்
Epics காவியம் / காப்பியங்கள்
Equation சமன்பாடு
Equivalent இணையான
Essential qualification இன்றியமையாத் தகுதி
Ethnic group இனப்பிரிவு
Ethos of care அக்கறை சார்ந்த பண்புகள் (ஒழுக்கப்பண்பு)
Etymology வேர்ச்சொல்லியல்
Evaluate கணிப்பு (மதிப்பிடு, கணி)
Everyday situations அன்றாட வாழ்க்கைச் சூழல்கள்
Examinable subject தேர்வுப்பாடம்
Examination-driven approach தேர்வுநோக்கு அணுகுமுறை
Exception விதிவிலக்கு, புறனடை
Exclamation வியப்பு, வியப்பொலி
Exclusion தவிர்ப்பு, நீக்கம்
Excursion இன்பவுலா
Exhibit கண்காட்சிப்பொருள்
Exhibition பொருட்காட்சி / கண்காட்சி
Existence இருப்பு / உளதாயிருத்தல்
Expatriate Teachers வெளிநாட்டு ஆசிரியர்கள்
Experience அனுபவம் / பட்டறிவு
Experiment ஆய்வு / சோதனைமுறை
Experimental Research சோதனைமுறை ஆராய்ச்சி
Experimenter சோதனைமுறை ஆய்வு செய்பவர்
Experts நிபுணர்கள்
Explicitly வெளிப்படையாக
Express Course விரைவுநிலை வகுப்பு
Expression of thought சிந்தனை வெளிப்பாடு
Extension விரிவாக்கம்
Extinction மறைந்த / அழிந்த
Fable நீதிக்கதை / கட்டுக்கதை / பழங்கதை
Facilitation வழிநடத்துதல்
Fact finding உண்மைத் தகவலறிதல்
Fairy tales கற்பனைக் கதைகள் / தேவதைக் கதைகள்
Fantasy மிகைக் கற்பனை
Featured resources காணக்கிடைக்கின்ற வளங்கள்
Feeble mindedness அறிவுத்திறம் குறைந்த
Feedback கருத்துரைப்பு / கருத்துத்திரட்டு
Feeder Schools சார்புப் பள்ளிகள்
Feminism பெண்ணியம்
Field தளம் / துறை
Financial Assistance Scheme நிதி உதவித் திட்டம்
Flag hoisting கொடியேற்றம்
Flash card மின்னட்டை
Flexibility நெகிழ்வுத்தன்மை / நீக்குபோக்கு
Fluency சரளம்
Focus group discussions குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்
Folk Literature நாட்டுப்புற இலக்கியம்
Foreign collaboration அயல்நாட்டு கூட்டுமுயற்சி / அயல்நாட்டு இணைவாக்கம்
Foreign System School அயல்நாட்டுத் திட்டப் பள்ளி
Formal language எழுத்து மொழி
Formally-structured approach முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை
Formal Tamil எழுத்துத் தமிழ்
Formative assessment முறைசாரா மதிப்பீடு
Formative, Informal, Continual Assessment ஆக்க, முறைசாரா, தொடர் மதிப்பீடு / வளரறி மதிப்பீடு
Forum கருத்துக்களம்
Foundation-level Subjects அடிப்படை நிலைக்குரிய பாடங்கள்
Fragments துகள்கள்
Framework பணிச்சட்டம்
Free and compulsory education இலவசக் கட்டாயக் கல்வி
Free form கட்டிலா வடிவம்
Functional approach செயல்முறை சார்ந்த அணுகுமுறை / பயன்பாட்டு அணுகுமுறை
Fundamentally அடிப்படையில்
Fusion Course பாடக் கலவைத் திட்டம்
Future generations எதிர்கால சந்ததியினர் / எதிர்காலத் தலைமுறையினர்
Gallery காட்சியகம் / பார்வையாளர் அமர்விடம்
Gazette அரசிதழ்
General பொது
General Certificate of Education பொதுக் கல்விச் சான்றிதழ்
Generalization பொதுமையாக்கம்
Generate உருவாக்குதல் / தோற்றுவித்தல்
Geography புவியியல், நிலநூல்
Gesture சைகை
Gifted Education Programme மீத்திறன் கல்வித் திட்டம்
Girl Guides பெண் சாரணர் படை
Global city உலக நகரம்
Globalisation உலகமயமாதல்
Globe உலகம், உருண்டை வடிவம்
Glossary சொற்கோவை / சொற்களஞ்சியம்
Good Progress Awards சிறந்த முன்னேற்ற விருதுகள்
Government-Aided School அரசு உதவி பெறும் பள்ளி
Grade மதிப்பளவை
Grammar இலக்கணம்
Grammar items இலக்கணக் கூறுகள்
Graph வரைபடம், வரைகட்டம்
Graphic stimulus கருத்து விளக்கப்படம்
Grassroots Organisations அடித்தள அமைப்புகள்
Group discussion குழுக் கலந்துரையாடல்
Groupings குழுப் பிரித்தல்
Head, Heart and Hands அறிவு, மனம், செயல்
Headmaster தலைமையாசிரியர்
Headmistress பெண் தலைமையாசிரியர்
Heartware இதயப்பண்பு, மனிதநேயம்
Helpdesk இணைய உதவிச்சேவை, helpline - தொலைபேசி உதவிச் சேவை
Helping hands உதவும் கரங்கள்
Heuristic learning பட்டறிவுவழிக் கற்றல்
High-ability Student உயர்திறன் மாணவர்
High School Education உயர்நிலைக் கல்வி
Holistic Report Card முழுமையான குறிப்பு அட்டை
Home study வீட்டுப் படிப்பு
Home work வீட்டுப்பாடம்
Homograph ஒப்பெழுத்து
Homonym பல்பொருள் ஒருசொல்
Hotline நேரடித் தொலைபேசித் தொடர்பு / அவசரத் தொலைபேசி எண்
Hypotheses கருதுகோள்கள்
Icon படவுரு / அடையாளச் சின்னம்
Ideology சித்தாந்தம் / கோட்பாடு
Idiom மரபுத்தொடர்
Idiosyncracy வித்தியாசப்போக்குள்ள
Illiteracy படிப்பறிவின்மை. கல்லாமை
Illiterate படிப்பறிவில்லாதவர், கல்லாதவர்
Image தோற்றம், பிம்பம், நற்பெயர்
Imagery உருவக அணி
Imitate போலச்செய்தல்
Impact தாக்கம்
Implementation நடைமுறைப்படுத்துதல் / அமலாக்கம்
Incidental learning சமயோசிதமுறையில் கற்றல்
Incompatible values பொருந்தாத விழுமியங்கள்
Inculcation மனத்தில் பதியவைத்தல், பயிற்றுவித்துப் பழக்குதல்
Indirect learning மறைமுகக் கற்றல்
Individualised feedback தனிநபர் கருத்துரைப்பு
Induction அறிமுகப் பயிற்சித் திட்டம் / அறிமுக ஈடுபாட்டுத் திட்டம்
In due diligence உரிய சிரத்தை எடுத்தல்
Inference உய்த்துணர்தல்
Influence செல்வாக்கு / தாக்கம்
Info-communications technology (ICT) தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
Informal assessment முறைசாரா மதிப்பீடு
Informal education முறைசாராக் கல்வி
Innovation in Information Technology தகவல் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம்
In-service education பணியிடைக் கல்வி
Inspection circle ஆய்வுக் கல்வி வட்டம்
Instinct உள்ளுணர்வு
Institute of Technical Education (ITE) தொழில்நுட்பக் கல்விக்கழகம்
Instruction அறிவுரை; கற்பித்தல்
Integrated teaching of values விழுமியங்களை ஒருங்கிணைத்துக் கற்பித்தல்
Interactive இருவழித்தொடர்பு
Interactive activities இருவழித் தொடர்பு நடவடிக்கைகள்
Interesting teaching method ஆர்வமூட்டும் கற்பித்தல் முறை
Interest in learning கற்றலில் ஆர்வம்
International Friendship Day அனைத்துலக நட்பு நாள்
Internationally recognised உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட
Interpersonal மற்றவர்களுடனான உறவுநிலை
Interpretation பொருள் விளக்கம்
Intonation தொடரழுத்தம் / ஓசை நயம்
Invention உருவாக்கம் / கண்டுபிடிப்பு
Invigilation தேர்வுக்கூடக் கண்காணிப்பு
Irony முரண்பொருள்
Isolation தனிமைப்படுத்துதல்
Joint Admissions Exercise கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை
Joint venture கூட்டு முயற்சி
Key Performance Indicator முக்கியச் செயல்பாட்டுக் குறியீடு
Language competence மொழித் திறன்
Language environment மொழிச் சூழல்
Language games மொழி விளையாட்டுகள்
Learning கற்றல், அறிதல்
Learning journey கற்றல் பயணம்
Learning Outcomes கற்றல் விளைவுகள்
Learning types கற்றல் வகைகள் / கற்றல் முறைகள்
Learning with multimedia பல்லூடகங்களைப் பயன்படுத்திக் கற்றல்
Lesson observation கற்றல் கற்பித்தலை உற்றுநோக்கல்
Life-long learning வாழ்நாள் கற்றல்
Listening and speaking கேட்டலும் பேசுதலும்
Listlessness அக்கறையின்மை
Literal translation சொல்வழிப் பெயர்ப்பு / நேரடி மொழிபெயர்ப்பு
Literary usage இலக்கிய வழக்கு
Loan word கடன் சொல்
Lukewarm இளஞ்சூடான; அரைகுறை ஆர்வமுடைய
Master வல்லுநர்
Masterplan for IT in Education தகவல் தொழில்நுட்பக் கல்வி முதன்மைத்திட்டம்
Master Teacher முதன்மை ஆசிரியர்
Materials கருவிகள்
Meaningful evaluation அர்த்தமுள்ள மதிப்பீடு
Medal பதக்கம்
Media information ஊடகத் தகவல்
Medium of instruction பயிற்றுமொழி
Melody இன்னிசை
Memorisation மனனஞ்செய்தல் / நெட்டுருச்செய்தல்
Memory span நினைவு அளவை
Memory store நினைவகம்
Merged stream இணைக்கப்பட்ட பிரிவு
Metaphor உருவகம்
Metaphoric meaning உருவகப் பொருள்
MOE Language Centre கல்வி அமைச்சு மொழி நிலையம்
MOE Masterplan of Awards for Schools பள்ளிகளுக்கான கல்வி அமைச்சின் சிறப்புத்திட்ட விருதுகள்
Monitor சட்டாம்பிள்ளை, கண்காணித்தல்
Monolingual ஒருமொழி
Monologue தனிமொழி / தனியுரை
Moral values நன்னெறிப் பண்புகள், விழுமியங்கள்
Most popular மிகப் பிரபலமான
Most recent ஆக அண்மைய
Motivation ஊக்கம் / முனைப்பு
Motivational strategies ஊக்குவிப்பு உத்திகள்
Motive உள்நோக்கம் கற்பித்தல்
Motor learning இயக்கத்திறன் கற்றல்
Multi-cultural பல்லினப் பண்பாடு சார்ந்த
Multi-cultural heritage பல்லினப் பண்பாட்டுப் பாரம்பரியம்
Multi-media presentation பல்லூடகப் படைப்பு
Multiple choice question தெரிவுவிடை வினா
Multiple Intelligences (MI) பல்வகை நுண்ணறிவுத் திறன்கள்
Multi-purpose schools பல்நோக்குப் பள்ளிகள்
Murmur முணுமுணுப்பு
Narration விளம்புதல் / எடுத்துரைத்தல்
National Council of Social Services (NCSS) தேசிய சமூக சேவை மன்றம்
National Education தேசியக் கல்வி
National examinations தேசியத் தேர்வுகள்
National Institute of Education (NIE) தேசியக் கல்விக் கழகம்
National Trade Union Congress (NTUC) தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்
NE Symposium தேசியக் கல்விக் கருத்தரங்கு / தேசியக் கல்விக் கலந்தாய்வரங்கு
New password புதிய மறைசொல் / புதிய கடவுச்சொல்
New rubric புதிய தகுதிநிலை விளக்கக் குறிப்பு
Niche of Excellence உன்னதத் தனித்தன்மை
Niche Programme School தனித்தன்மைத் திட்டப் பள்ளி
Non-Tamil Indian Languages தமிழ் அல்லாத இந்திய மொழிகள்
Non-verbal communication வாய்மொழியிலாப் பரிமாற்றம்
Notes of lesson பாடக்குறிப்பு
Notifications அறிவிப்புகள்
Nursery rhymes மழலையர் பாடல்கள்
Nurture students’ competence மாணவர்களின் தேர்ச்சித்திறனைப் பேணிவளர்த்தல்
Observatory நுண்ணாய்வகம்
Official capacity அலுவல் தகுதி; அலுவல் பொறுப்பு, அதிகாரத்துவ நிலை
Official languages அதிகாரத்துவ மொழிகள்
Official Secret அரசுசார் இரகசியம்
Officiating capacity செயலமர் தகுதி
Omission விடுபடல், நீக்கப்படுதல்
Opportunity வாய்ப்பு
Options விருப்பத் தெரிவுகள்
Oral approach வாய்மொழி அணுகுமுறை
Oral assessment வாய்மொழிச் சோதனை
Oral examination வாய்மொழித் தேர்வு
Oral presentation வாய்மொழிப் படைப்பு
Oral proficiency certification வாய்மொழித் தேர்ச்சி நிர்ணயம்
Organisational effectiveness நிர்வாகத் திறன்
Outstanding Development Awards தலைசிறந்த வளர்ச்சிக்கான விருது
Overall ஒட்டுமொத்தம்
Overall feedback ஒட்டுமொத்தக் கருத்துத்துரைப்பு
Overall level ஒட்டுமொத்த நிலை
Overdue tasks காலங்கடந்த பணிகள்
Over learning மீக்கற்றல்
Palaestra மற்போர்ப் பள்ளி
Paradigm கட்டளைப்படிவம்
Paralogia போலி நியாயம் கற்பித்தல்
Participant கலந்துகொள்பவர்
Partnership in Education கல்வியில் தோழமை
Part-time Teaching Programme பகுதிநேரக் கற்பித்தல் திட்டம்
Pedagogy கற்பித்தல்முறை / கற்பித்தலியல்
Pedant கல்விச் செருக்குடையவன்
Percentage விழுக்காடு
Perception கண்ணோட்டம்
Perceptual learning புலன்காட்சி மூலம் கற்றல்
Performance-based assessment செயல்திறன் மதிப்பீடு
Personality ஆளுமை
Physical & aesthetics உடற்பயிற்சியும் கவின்கலையும்
Physical education உடற்பயிற்சிக் கல்வி
Physical health உடல் நலம்
Physics இயற்பியல் / பெளதிகம்
Picture description பட விளக்கம்
Play therapy விளையாட்டுவழி சிகிச்சை
Polytechnic பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி
Polytechnic-school review committee பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி-பள்ளி மறு ஆய்வுக் குழு
Portfolio work படைப்புத் தொகுப்பு / படைப்புத் திறன் தொகுப்பு
Post-Secondary Education பள்ளிக்குப் பிந்தைய கல்வி
Post-secondary Education Institutions பள்ளிக்குப் பிந்தைய கல்வி நிலையங்கள்
Practical relevance நடைமுறைப் பொருத்தப்பாடு
Practical work செயல்முறை வேலை
Pragmatism நடைமுறைநோக்கு
Predominant அதிகச் செல்வாக்குப் பெற்ற
Preface முகவுரை
Pre-requistive முன்தேவை
Pre-School Education பள்ளிக்கு முந்தைய கல்வி
Previous முந்தைய
Pre-vocational வாழ்க்கைத் தொழிலுக்கு முந்தைய
Process model செய்திறன் மாதிரிவடிவம்
Professional Development தொழில் சார்ந்த மேம்பாடு / பணித்திறன் மேம்பாடு
Professional Development and Management பணி மேம்பாடும் நிர்வாகமும்
Proficiency தேர்ச்சி / திறன்
Proficiency descriptors தேர்ச்சிநிலை விளக்கக்குறிப்புகள்
Proficient Language Users மொழியைத் திறம்படப் பயன்படுத்துவோர்
Progress முன்னேற்றம் / வளர்ச்சி
Pronunciation உச்சரிப்பு, ஒலிப்பு
Prose உரைநடை
Prosody யாப்பு
Prototype மூல முன்மாதிரி
Psycholinguistics உளமொழியியல்
Public Gallery பொதுக் காட்சியகம், பார்வையாளர் அமர்விடம்
Quality assurance framework தர உறுதிக் கட்டமைப்பு
Question bank வினா வங்கி
Quotation மேற்கோள்
Racial dialect இனக் கிளைமொழி
Racial Harmony Day இன நல்லிணக்க நாள்
Rational learning பகுத்தறிவுப் படிப்பு
Rational validity அறிவுசார் ஏற்புடைமை
Reader வாசிப்புப் புத்தகம், வாசிப்பாளர்
Reading fluency சரளமான வாசிப்பு
Reading strategies வாசிப்பு உத்திகள்
Recitation ஓதல்
Reconstruction மீட்டாக்கம், மீட்டுருவாக்கம்
Record பதிவுசெய்
Red cross society செஞ்சிலுவைச் சங்கம்
Re-education மீள் கல்வி
Re-examination மறு தேர்வு
Refresher course மறு பயிற்சி
Regional dialect வட்டாரக் கிளைமொழி
Regional varieties வட்டார வழக்குகள்
Reinforcement வலுவூட்டல், வலியுறுத்துதல்
Report book மாணவர் பள்ளிக் குறிப்பேடு
Resource Centre வளமையகம்
Responsive curriculum நெகிழ்வுத்தன்மைமிக்க பாடக்கலைத்திட்டம்
Revised syllabus திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்
Role-play பாகமேற்று நடித்தல்
Rootedness வேரூன்றி இருத்தல்
Root word அடிச்சொல்
Rote learning மனனவழிக் கற்றல்
Scholar கல்விமான், புலவர்
Scholarship கல்வி உதவிநிதி
School Advisory Committee பள்ளி ஆலோசனைக் குழு
School-based Assessment பள்ளி சார்ந்த மதிப்பீடு
School Cluster System பள்ளிக் குழும முறை
School-Community Partnership பள்ளி சமூகக் கூட்டுறவு
School Distinction Award பள்ளித் தனித்தன்மை விருது
School Excellence Award பள்ளி உன்னத விருது
School Excellence Model மாதிரி உன்னதப் பள்ளி
School Graduation Certificate பள்ளி நிறைவுச் சான்றிதழ்
School Holistic Report Card ஒட்டுமொத்த / முழுமையான மாணவர் பள்ளிக் குறிப்பேடு
School Management Committee பள்ளி மேலாண்மைக் குழு
School Motto பள்ளி முழக்கவரி
School ranking பள்ளித் தரவரிசை
Science of Dharma அறவியல்
Secondary Education உயர்நிலைக் கல்வி
Second language இரண்டாம் மொழி
Secret code மறைசொற்குறி
Self Help Groups சுய உதவிக் குழுக்கள்
Self-learning சுய கற்றல்
Self reflection சுய சிந்தனைபிரதிபலிப்பு / சிந்தனைமீட்சி
Semester இருபருவக் கல்வித் திட்டம்
Senior Teacher மூத்த ஆசிரியர்
Sequential code சீரலைச் சொற்குறி
Show-and-tell பொருளைக் காட்டிப் பேசுதல்
Silent reading மௌன வாசிப்பு
Simultaneous இணைநிகழ்
Singaporean flavour சிங்கப்பூர் மணம்
Singapore School for the Visually Handicapped பார்வையற்றோருக்கான சிங்கப்பூர்ப் பள்ளி
Singapore's identity சிங்கப்பூர் அடையாளம்
Situational context இடச்சூழல்
Sketch மாதிரிச் சித்திரம்
Social Communication சமூகநிலைத் தொடர்பு
Social dialect சமூகக் கிளைமொழி
Social learning சமூகக் கல்வி
Social Studies சமூகவியல் பாடம்
Spaced learning இடைவிட்டுக் கற்றல்
Speaking and learning environment பேசுவதற்கும் கற்பதற்குமான சூழல்
Speaking skills பேசுதல் திறன்
Special Admissions Exercise மாணவர் சிறப்புச் சேர்க்கை நடவடிக்கை
Special Assistance Plan Schools (SAP) சிறப்பு உதவித்திட்டப் பள்ளிகள்
Special Course சிறப்பு வகுப்பு
Special Needs Officers சிறப்புத் தேவை அதிகாரிகள்
Specific recommendations குறிப்பிட்ட பரிந்துரைகள்
Speech-like texts பேச்சுப் பனுவல்கள்
Spoken Tamil பேச்சுத் தமிழ்
Spontaneous speech தன்னியல்பான உடனடிப் பேச்சு
Stakeholders பங்குதாரர்கள்
Stammering திக்குதல்
Standard dialect தகுநிலைக் கிளைமொழி
Standardised Tamil terminology தரப்படுத்தப்பட்ட தமிழ்க்கலைச்சொல் தொகுதி
Standard-level subjects தரநிலைக்கேற்ற பாடங்கள்
State enterprise அரசாங்கத் தொழில் முயற்சி
Static state இயங்காநிலை
Stationery எழுதுபொருள்கள்
Stereotype படிவார்ப்பு, ஒரேதன்மைப்படுத்தல்
Stimulus ஊக்கக்கூறு, செயலூக்கி
Strategies for Effective Engagement and Development (SEED) பயன்முனைப்புமிக்க ஈடுபாட்டிற்கும் முன்னேற்றத்திற்குமான உத்திகள்
Structural approach அமைப்பியல் அணுகுமுறை
Structure அமைப்புமுறை
Student All-Round Development மாணவருடைய முழு வளர்ச்சி
Student attitude மாணவர் மனப்பான்மை
Studious கல்வி ஆர்வமுடைய; முயற்சி வேட்கையுடைய
Subject-based Banding பாட அடிப்படையில் தரவகைமை
Subject-matter பாடப்பொருள்
Substitution learning பதிலீடு கற்றல், பொருத்தமுறை கற்றல்
Suggestive meaning தொனிப் பொருள்
Suitability பொருத்தப்பாடு
Suitable பொருத்தமான
Suitable passages பொருத்தமான பனுவல்கள்
Summary சுருக்கம்
Summative Assessment பருவ மதிப்பீடு, முறைசார்ந்த மதிப்பீடு
Survey மதிப்பாய்வு, கருத்தாய்வு
Sustained Achievement Award தொடர் சாதனை விருது
Syllabus பாடத்திட்டம்
Symposium கலந்தாய்வரங்கு
Tamil alphabet தமிழ் நெடுங்கணக்கு
Tamil Alphabet Learning தமிழ் எழுத்துகளைக் கற்றல்
Tamil Language Curriculum and Pedagogy Review Committee தமிழ்மொழிப் பாடத்திட்டம், கற்பித்தல் மறு ஆய்வுக் குழு
Tamil speaking community தமிழ் பேசும் சமூகம்
Teachers’ Network ஆசிரியர் தொடர்பகம்
Teacher Training and Development ஆசிரியர் பயிற்சியும் மேம்பாடும்
Teaching aids கற்பித்தல் கருவிகள்
Teaching approaches கற்பித்தல் அணுகுமுறைகள்
Teaching methods பயிற்றுமுறைகள்
Teaching notes கற்பிக்கும் குறிப்புகள்
Teaching techniques கற்பிக்கும் நுணுக்கங்கள்
Teaching units கற்பித்தல் அலகுகள்
Team work குழுப் பணி / குழு வேலை
Text book பாடநூல்
The Board for the Teaching & Testing of South Asian Languages (BTTSAL) தென்கிழக்காசிய மொழிகளின் கற்பித்தல் மற்றும் தேர்வு வாரியம்
The Committee on National Education தேசியக் கல்விக் குழு
The Desired Outcomes of Education கல்வியின் விரும்பத்தக்க விளைவுகள்
The Singapore Story சிங்கப்பூர்க் கதை
Thesis ஆய்வுரை
The Task Force on Greater Engagement with SPED school ‘ஸ்பெட்’ பள்ளியுடன் அதிக ஈடுபாடுகொள்வதற்கான திட்டப் பணிக்குழு
TL Curriculum தமிழ்மொழிப் பாடத்திட்டம்
TL Curriculum Framework பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம்
TL Specialists தமிழ்மொழி சிறப்பதிகாரிகள்
Total Defence Day முழுமைத் தற்காப்புத் தினம்
Touching Hearts & Enriching Minds இதயங்களைத் தொட்டு, எண்ணங்களை வளப்படுத்துவோம்
Tractive effort இழுப்பு முயற்சி
Training பயிற்சி, பயிற்றல்
Trait பண்பியல்பு
Translation மொழிபெயர்ப்பு
Transliteration பெயர்த்தெழுதுதல், ஒலிபெயர்ப்பு
Transmitter ஒலிபரப்பி
Transmitting culture கலாசாராத்தைப் பரப்புதல்
Trophy வெற்றிக்கோப்பை, வெற்றிச்சின்னம்
Truancy பள்ளிக்கு மட்டம் போடுதல்
Tutor தனி ஆசான்
Two-key system இருவழித் திட்டம்
Uniformed Groups சீருடைக் குழுக்கள்
University பல்கலைக்கழகம்
Vacation விடுமுறைக்காலம்
Vibrancy துடிப்புள்ள/துடிப்புமிக்க
Vibrant துடிப்பான
Video ஒளிக்காட்சி, காணொளி
Video recording ஒளிப்பதிவு
Vision for the Tamil Language தமிழ்மொழிக்குரிய இலக்கு / தொலைநோக்கு
Vocabulary சொல்வளம்
Vodcast வலையொளி
Voluntary Welfare Organisations (VWOs) தொண்டூழிய நல அமைப்புகள்
Volunteer தொண்டூழியர் / தன்னார்வலர்
Water colour painting நீரோவியம்
White space வெற்றிடம்
Whole learning method முழுமைக் கல்வி முறை
Whole school approach ஒட்டுமொத்தப் பள்ளி அணுகுமுறை
Back To Top