வளர்தமிழ் இயக்கத்தைப் பற்றி

வளர்தமிழ் இயக்கத்தைப் பற்றி...

பெயர் விளக்கம்

செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் சிங்கப்பூரில் தமிழ்மொழியின் இந்த நீடித்த வளர்ச்சியைக் குறிக்கும் நினைவூட்டலாகவும் இப்பெயர் இவ்வியக்கத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.

நோக்கம்

சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஓங்கச் செய்வதே வளர்தமிழ் இயக்கத்தின் தலையாய நோக்கமாகும்.

Back To Top