| Government technology organisation | அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு | 
                
                    
                        | Magnificent display | பிரமாண்ட காட்சி / பிரமிக்கத்தக்க காட்சி | 
                
                    
                        | Maiden flight | முதல் பயணம் / தொடக்கப் பயணம் | 
                
                    
                        | Maid levy | பணிப்பெண் தீர்வை | 
                
                    
                        | Maintenance of religious harmony act | சமய நல்லிணக்கப் பேணல் சட்டம் | 
                
                    
                        | Maintenance service | பராமரிப்புச் சேவை | 
                
                    
                        | Major deficiency | பெருங்குறைபாடு | 
                
                    
                        | Major offensive | பெருந்தாக்குதல் / மிகப்பெரிய தாக்குதல் | 
                
                    
                        | Major powers | பெரும் சக்திகள் | 
                
                    
                        | Makeover | பொலிவூட்டுதல் / மெருகூட்டுதல் / அழகுபடுத்துதல் | 
                
                    
                        | Make room / make way | வழி விடுதல் | 
                
                    
                        | Makeshift camps | இடைக்கால முகாம்கள் | 
                
                    
                        | Makeshift hospital | இடைக்கால மருத்துவமனை | 
                
                    
                        | Makeshift orphanage | ஆதரவற்றோருக்கான இடைக்கால இல்லம் | 
                
                    
                        | Mammal | பாலூட்டி | 
                
                    
                        | Mammoth | மாபெரும் / மிகப்பெரிய | 
                
                    
                        | Management executive service | மேலாண்மை நிர்வாக சேவை | 
                
                    
                        | Managerial concept | நிர்வாகக் கோட்பாடு / மேலாண்மைக் கோட்பாடு | 
                
                    
                        | Manipulate | திறமையாகக் கையாள்வது / சூழ்ச்சித்திறத்துடன்  கையாள்வது | 
                
                    
                        | Manpower policy | மனிதவளக் கொள்கை | 
                
                    
                        | Manpower shortage | மனிதவளப் பற்றாக்குறை | 
                
                    
                        | Manslaughter | நோக்கமில்லாக் கொலை | 
                
                    
                        | Manufacturing sector | உற்பத்தித் துறை / செய்பொருள்துறை | 
                
                    
                        | Marathon | நெடுந்தொலைவோட்டம் | 
                
                    
                        | Marching contingents | அணிநடைப் பிரிவினர் | 
                
                    
                        | Marine police | கடலோரக் காவற்படை | 
                
                    
                        | Marine sector | கடல்சார் தொழில்துறை | 
                
                    
                        | Maritime information zone | கடல்துறைத் தகவல் வட்டாரம் / கடல்துறைத் தகவல் மண்டலம் | 
                
                    
                        | Maritime & port authority (mpa) | கடல்துறை, துறைமுக ஆணையம் | 
                
                    
                        | Maritime trade | கடல்துறை வர்த்தகம் / கடல்துறை வணிகம் | 
                
                    
                        | Maritime university | கடல்துறைப் பல்கலைக் கழகம் | 
                
                    
                        | Marked improvement | குறிப்பிடத்தக்க முன்னேற்றம் | 
                
                    
                        | Market condition | சந்தை நிலவரம் | 
                
                    
                        | Marketing agent | விற்பனை விளம்பர முகவர் | 
                
                    
                        | Marriage preparation programme | திருமண ஆயத்தத் திட்டம் | 
                
                    
                        | Mars exploration | செவ்வாய்க்கோள் ஆய்வுப் பயணம் | 
                
                    
                        | Martial arts | தற்காப்புக் கலை | 
                
                    
                        | Martial law | இராணுவச் சட்டம் | 
                
                    
                        | Mascot | நற்பேற்றுச் சின்னம் / அடையாளச் சின்னம் | 
                
                    
                        | Mass destruction | பேரழிவு | 
                
                    
                        | Mass display | மாபெரும் கண்காட்சி / மாபெரும் திறன் விளக்கக் காட்சி | 
                
                    
                        | Massive corruption | பெரிய அளவு ஊழல் | 
                
                    
                        | Massive evacuation | பெருமளவில்  மக்களை வெளியேற்றல் | 
                
                    
                        | Massive search operation | மாபெரும் தேடுதல் நடவடிக்கை / மாபெரும் தேடுதல் வேட்டை | 
                
                    
                        | Massive tremors | மாபெரும் அதிர்வுகள் | 
                
                    
                        | Mass media | பொதுத் தகவல்சாதனங்கள் / பொது ஊடகங்கள் | 
                
                    
                        | Master plan | பெருந்திட்டம் / முதன்மைத் திட்டம் | 
                
                    
                        | Maternal instinct | தாய்மை உள்ளுணர்வு / தாய்மை உந்துணர்வு | 
                
                    
                        | Maternity leave | மகப்பேற்று விடுப்பு / பேறுகால விடுப்பு | 
                
                    
                        | Mature estate | முழு வளர்ச்சியடைந்த பேட்டை / முதிர்ச்சியடைந்த பேட்டை | 
                
                    
                        | Mausoleum | கல்லறை நினைவிடம் / கல்லறை மண்டபம் | 
                
                    
                        | Means testing | பண வசதிச் சோதனை / வருவாய் வழிவகைச் சோதனை | 
                
                    
                        | Meat eating virus | சதை தின்னும் கிருமி | 
                
                    
                        | Media campaign | ஊடக விளம்பர இயக்கம் | 
                
                    
                        | Media development authority of singapore (mda) | சிங்கப்பூர்த் தகவல்சாதன மேம்பாட்டு ஆணையம் | 
                
                    
                        | Media spokesperson | ஊடகத் தொடர்பாளர்/ செய்தித் தொடர்பாளர் | 
                
                    
                        | Media watchdogs | ஊடகக் கண்காணிப்பாளர்கள் | 
                
                    
                        | Medical hub | மருத்துவ மையம் | 
                
                    
                        | Medical infrastructure | மருத்துவ உள்ளமைப்பு வசதிகள் / மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் | 
                
                    
                        | Medical leave | மருத்துவ விடுப்பு | 
                
                    
                        | Medisave | மருத்துவச் சேமிப்புத் திட்டம் | 
                
                    
                        | Medishield scheme | மருத்துவக் காப்புறுதித் திட்டம் | 
                
                    
                        | Meditation | தியானம் | 
                
                    
                        | Medley swimming | பலபாணி நீச்சல் | 
                
                    
                        | Memorandum of understanding (mou) | இணக்கக் குறிப்பு / புரிந்துணர்வுக் குறிப்பு | 
                
                    
                        | Memorial service | நினைவாஞ்சலிக் கூட்டம் | 
                
                    
                        | Meningitis | மூளைவீக்க நோய் / மூளைக் காய்ச்சல் | 
                
                    
                        | Menopause | மாதவிடாய் நிரந்தரமாக முடிவுறுதல் | 
                
                    
                        | Mental health | மனநலம் | 
                
                    
                        | Mentor | மதியுரைஞர் /  / நெறிப்படுத்துபவர் | 
                
                    
                        | Mercury | பாதரசம், புதன் கோள் | 
                
                    
                        | Mercy relief (organisation) | ‘மெர்சி ரிலீஃப்’ மனிதாபிமான உதவி அமைப்பு | 
                
                    
                        | Meritocracy | தகுதிமுறை / திறமைக்கு அங்கீகாரம் | 
                
                    
                        | Meritocratic system | தகுதி  திறமை போற்றும் நடைமுறை | 
                
                    
                        | Meteor | எரிநட்சத்திரம் / எரிகல் / எரிமீன் | 
                
                    
                        | Meteorology | வானிலை ஆய்வியல் | 
                
                    
                        | Microelectronic devices | நுண்மின்னியல் கருவிகள் | 
                
                    
                        | Microscope | நுண்பெருக்கி | 
                
                    
                        | Microwave oven | நுண்ணலை அடுப்பு | 
                
                    
                        | Midfielder (soccer) | நடுத்திடல் ஆட்டக்காரர் (காற்பந்தாட்டம்) | 
                
                    
                        | Midwife | மகப்பேற்றுத் தாதி / பேறு காலத்தாதி | 
                
                    
                        | Mid-year examination | ஆண்டிடைத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு | 
                
                    
                        | Migrant workers | குடிபெயர்ந்த ஊழியர்கள் | 
                
                    
                        | Milestone | மைல்கல் / முக்கியக் கட்டம் | 
                
                    
                        | Militant | போராளி | 
                
                    
                        | Military aggression | இராணுவ ஆக்கிரமிப்பு | 
                
                    
                        | Military intelligence | இராணுவ வேவு நடவடிக்கை | 
                
                    
                        | Military operation | இராணுவ நடவடிக்கை | 
                
                    
                        | Military rule | இராணுவ ஆட்சி | 
                
                    
                        | Military setback | இராணுவ நடவடிக்கையில்/தாக்குதலில் பின்னடைவு | 
                
                    
                        | Military skill | இராணுவத் திறன் | 
                
                    
                        | Military strike | இராணுவத் தாக்குதல் | 
                
                    
                        | Military tribunal | இராணுவ  விசாரணை நடுவர் மன்றம் | 
                
                    
                        | Millennium | ஆயிரமாண்டுக்காலம் | 
                
                    
                        | Mindset change | மனப்போக்கு மாற்றம் / எண்ணப்போக்கு மாற்றம் | 
                
                    
                        | Mineral water | கனிமச் சத்து நீர் | 
                
                    
                        | Minimal impact | குறைந்தபட்சத் தாக்கம் / குறைந்த அளவு தாக்கம் | 
                
                    
                        | Ministerial committee | அமைச்சர்நிலைக் குழு | 
                
                    
                        | Ministerial meeting | அமைச்சர்நிலைக் கூட்டம் | 
                
                    
                        | Minister mentor | மதியுரை அமைச்சர் | 
                
                    
                        | Minister of state | துணையமைச்சர் | 
                
                    
                        | Ministry of home affairs | உள்துறை அமைச்சு | 
                
                    
                        | Ministry of information, communication and the arts | தகவல், தொடர்பு, கலை அமைச்சு | 
                
                    
                        | Minority candidate | சிறுபான்மை இன வேட்பாளர் | 
                
                    
                        | Minority candidate certificate | சிறுபான்மை இன வேட்பாளர் சான்றிதழ் / | 
                
                    
                        | Misinformation | தவறான தகவல் | 
                
                    
                        | Missile | ஏவுகணை | 
                
                    
                        | Missile attack | ஏவுகணைத் தாக்குதல் | 
                
                    
                        | Missile defense agency | ஏவுகணைத் தற்காப்பு அமைப்பு | 
                
                    
                        | Missile mishap | ஏவுகணை விபத்து | 
                
                    
                        | Mission control (space) | விண்கலக் கட்டுப்பாட்டு நிலையம் | 
                
                    
                        | Mobile phone | கைத்தொலைபேசி / கைபேசி / அலைபேசி | 
                
                    
                        | Mobile phone coverage | கைத்தொலைபேசித் தொடர்பு எல்லை | 
                
                    
                        | Mobile technology | கையடக்கத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் | 
                
                    
                        | Mock explosion | பாவனை வெடிப்பு | 
                
                    
                        | Models (fashion) | விளம்பரக் கலைஞர்கள் (ஆடை அலங்காரம்) | 
                
                    
                        | Modest recovery (economy) | மிதமான மீட்சி (பொருளியல்) | 
                
                    
                        | Modular lesson approach | பாடத் தொகுதி அணுகுமுறை | 
                
                    
                        | Modus operandi | செயற்படுமுறை | 
                
                    
                        | Molest trial | மானபங்க வழக்கு விசாரணை | 
                
                    
                        | Molotov cocktails | பெட்ரோல் குண்டுகள் | 
                
                    
                        | Momentous time | நினைவைவிட்டு நீங்காத் தருணம் | 
                
                    
                        | Momentum | சூடுபிடித்தல் / உந்துவேகம் | 
                
                    
                        | Monarchy | மன்னராட்சி | 
                
                    
                        | Monetary authority of singapore (mas) | சிங்கப்பூர் நாணய வாரியம் | 
                
                    
                        | Monsoon | பருவமழை / பருவக்காற்று | 
                
                    
                        | Monthly variable component  (salary) | மாதாந்தர மாறுவிகித அம்சம் (சம்பளம்) | 
                
                    
                        | Monumental task | மாபெரும் பணி / மகத்தான பணி | 
                
                    
                        | Morale | மனத்திண்மை / ஊக்கவுணர்வு / | 
                
                    
                        | Moral education | அறநெறிக் கல்வி | 
                
                    
                        | Moral obligation | தார்மீகக் கடப்பாடு / அறநெறிக் கடப்பாடு | 
                
                    
                        | Moral responsibility | தார்மீகப் பொறுப்பு / அறநெறிப் பொறுப்பு | 
                
                    
                        | Moratorium | தற்காலிகத் தடை / கால அவகாசம் / கடன் அடைப்புத் தவணைக் காலம் / கடன் தீர்க்கும் தவணைக் காலம் | 
                
                    
                        | Moribund economy | வீழ்ச்சியடைந்துவரும் பொருளியல் / செயல்படாநிலையிலுள்ள பொருளியல் | 
                
                    
                        | Mortality rate | இறப்பு விகிதம் | 
                
                    
                        | Mortgage | அடைமானம் | 
                
                    
                        | Mortgage loan | அடைமானக் கடன் | 
                
                    
                        | Motorcade | வாகன அணிவகுப்பு | 
                
                    
                        | Mounting problems | பெருகிவரும் பிரச்சினைகள் | 
                
                    
                        | Multi-agency committee | பலதரப்புக் குழு / பல அமைப்புக் குழு | 
                
                    
                        | Multi-dimensional talent | பல்வகைத்திறன் | 
                
                    
                        | Multi-lateral | பன்னாட்டு / பலதரப்பு | 
                
                    
                        | Multilateral exercise | பலதரப்புப் பயிற்சி  / பல தரப்பினர் கலந்துகொள்ளும் பயிற்சி | 
                
                    
                        | Multi-lateral trade talks | பலதரப்பு வர்த்தகப் பேச்சு /  பலதரப்பு வாணிகப் பேச்சு | 
                
                    
                        | Multi-market strategy | பல்வகைச் சந்தை உத்தி | 
                
                    
                        | Multimedia | பல்லூடகம் | 
                
                    
                        | Multimedia message service (mms) | பல்லூடகத் தகவல் சேவை | 
                
                    
                        | Multimedia super corridor | பல்லூடக வளாகம் | 
                
                    
                        | Multi-national company | பன்னாட்டு நிறுவனம் | 
                
                    
                        | Multi party government | பல கட்சி அரசாங்கம் | 
                
                    
                        | Multiple bomb blasts | தொடர் குண்டுவெடிப்புகள் | 
                
                    
                        | Multiple journey visas | பல பயண நுழைவு அனுமதி | 
                
                    
                        | Multiple organ failure | பல உறுப்புகளின் செயலிழப்பு | 
                
                    
                        | Multi-purpose hall | பன்னோக்கு மண்டபம் | 
                
                    
                        | Multi-racial issues | பல இன விவகாரங்கள் | 
                
                    
                        | Multi-tasking | ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்தல் / | 
                
                    
                        | Mumps | தாளம்மை | 
                
                    
                        | Musical fountain | இசை நீரூற்று / இன்னொலி நீரூற்று | 
                
                    
                        | Music download | இசைப் பதிவிறக்கம் | 
                
                    
                        | Musicians | இசைக் கலைஞர்கள் | 
                
                    
                        | Mutation of viruses | கிருமிகளின் மாறுபடுந்தன்மை | 
                
                    
                        | Mutual agreement | இருதரப்பு உடன்பாடு / பரஸ்பர உடன்பாடு | 
                
                    
                        | Mutual links | இருதரப்புத் தொடர்புகள் | 
                
                    
                        | Mysterious circumstance | மர்மமான சூழல் |