Alphabetical List

T
Englishதமிழ்
Tainted food பாழ்பட்ட உணவு / கெட்டுப்போன உணவு
Take a break ஓய்வெடு
Tanker (oil) எண்ணெய்க் கப்பல்
Task பணி
Task force பணிக்குழு
Tax benefits வரிச்சலுகை
Tax break வரிக்குறைப்பு
Tax cut bill வரிக்குறைப்பு மசோதா / வரிக்குறைப்பு சட்ட வரைவு
Tax evasion வரி ஏய்ப்பு
Tax exemption வரி விலக்கு
Tax incentives வரி ஊக்குவிப்பு
Taxiway (airport) இணைப்புப் பாதை (விமானநிலையம்)
Tax rebate வரித் தள்ளுபடி / வரிக் கழிவு
Tax reliefs வரி நிவாரணங்கள்
Teaching strategies கற்பித்தல் உத்திகள்
Team spirit குழுவுணர்வு
Technical glitch தொழில்நுட்பக் கோளாறு
Technical support தொழில்நுட்ப ஆதரவு
Technique உத்தி / வழிமுறை
Technocrat தொழில்நுட்ப வல்லுநர்
Technology sanctions தொழில்நுட்பத் தடைகள்
Technopreneur தொழில்நுட்பத்துறை தொழில்முனைவர்
Teenage pregnancy பதின்மவயதில் கருவுறுதல்
Teenager பதின்மவயதினர் / பதின்பருவத்தினர்
Telecom exchange தொலைத்தொடர்பு இணைப்பகம்
Telematch கேளிக்கை விளையாட்டு
Telephone booth தொலைபேசிக் கூடம்
Telepoll voting தொலைபேசி மூலம் வாக்களிப்பு
Teletext தொலைவாசகம்
Temporary ban தற்காலிகத் தடை
Tender ஏலக்குத்தகை
Terrace house வரிசைத் தரைவீடு
Territorial integrity பிரதேச முழுமை / பிரதேசம் கூறுபடாநிலை
Territorial rights பிரதேச உரிமை / மண்டல உரிமை
Territory பிரதேசம் / ஆட்சி எல்லை / மண்டல ஆட்சிப் பரப்பு
Terror cell பயங்கரவாதப் பிரிவு
Terrorism பயங்கரவாதம்
Terrorist பயங்கரவாதி
Terrorist network பயங்கரவாதிகளின் கட்டமைப்பு
Terrorists hideout பயங்கரவாதிகளின் மறைவிடம்
Tertiary institutions உயர்கல்வி நிலையங்கள்
Testify சாட்சியமளித்தல்
Testimony சாட்சியம் / சான்று / வாக்குமூலம்
Testimony before death மரண வாக்குமூலம்
Test-tube baby சோதனைக் குழாய்க் குழந்தை
Tetanus இசிவு நோய்
Thanksgiving day நன்றி நவிலும் நாள்
Thawing of relations கனிவுறும் உறவுகள் / சீர்பெறும் உறவுகள்
Theme park கருப்பொருள் சார்ந்த கேளிக்கைப் பூங்கா
Thermal scanner உடல்வெப்பச் சோதனைக் கருவி
Third alternative மூன்றாவது மாற்றணி
Third front மூன்றாவது அணி
Thorough investigation ஆழமான விசாரணை
Three-cornered fight மும்முனைப் போட்டி
Three dimension முப்பரிமாணம்
Three dimensional map முப்பரிமாண வரைபடம்
Thrilling display சிலிர்ப்பூட்டும் காட்சி / சிலிர்க்கவைக்கும் காட்சி
Thrill of joy ஆனந்தச் சிலிர்ப்பு
Throne அரியணை / அரசுகட்டில் / சிம்மாசனம் / அரியணை / ஆட்சிபீடம்
Through the grapevine அரசல் புரசலாகக் கேள்விப்படுதல் / சூசகமாகக் கேள்விப்படுதல்
Ties at low ebb நலிவுற்ற உறவு
Timber வெட்டுமரம் / மரத்துண்டு
Time bomb குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல் / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனிதர்
Time frame கால வரையறை
Tissue engineering திசுப் பொறியியல்
Tissues (body) திசுக்கள் (உடல்)
Title deed உடைமைப் பத்திரம் / உடைமை ஆவணம்
To exhaust முழுமையாகப் பயன்படுத்துதல் / முற்றிலும் தீர்த்தல்
Top brass தலைமை முதன்மை அதிகாரிகள்
Top-level உயர்நிலை
Top priority தலையாய முன்னுரிமை
Tornado சூறாவளி / சுழல் காற்று
Torrential rain பெருமழை
Total defence முழுமைத் தற்காப்பு
Touchscreen தொடுதிரை
Tourism board பயணத்துறைக் கழகம்
Town council நகர மன்றம்
Town renewal programme நகரப் புதுப்பிப்புத் திட்டம்
Trade barrier வர்த்தகத் தடை
Trade consultant வர்த்தக ஆலோசகர்
Trade development board வர்த்தக வளர்ச்சிக் கழகம்
Trade fair வர்த்தகக் கண்காட்சி
Trade imbalance வர்த்தக ஏற்ற தாழ்வு
Trademark வர்த்தக அடையாளம்
Trade qualification தொழில்திறன் தகுதி
Trade quotas வர்த்தக ஒதுக்கீடு
Traditional arts பாரம்பரியக் கலைகள் / மரபார்ந்த கலைகள்
Traditional values பாரம்பரிய விழுமியங்கள் / மரபார்ந்த விழுமியங்கள் / பாரம்பரியப் பண்புநலன்கள் / மரபார்ந்த பண்புநலன்கள்
Tragic end துயரமான முடிவு / அவல முடிவு
Tragic incident துயரச் சம்பவம் / வருந்தத்தக்க நிகழ்வு
Trained contractor பயிற்சிபெற்ற குத்தகையாளர் / பயிற்சிபெற்ற ஒப்பந்ததாரர்
Training centre பயிற்சி நிலையம்
Training cycle (national service) பயிற்சிக் காலம் (தேசிய சேவை)
Training method பயிற்சி முறை
Train track pile ரயில் தட அடித்தூண்
Trait பண்புத்திறம் / தனிப் பண்புக்கூறு
Traitor துரோகி
Trans border threats எல்லை தாண்டிய மிரட்டல்கள்
Transfer of sovereignty அரசுரிமை மாற்றம் / இறையாண்மை மாற்றம்
Transitory governing council இடைக்கால ஆட்சி மன்றம்
Transit passenger இடைமாற்றுப் பயணி
Trans-national crimes எல்லை தாண்டிய குற்றங்கள்
Transport hassle போக்குவரத்து இடையூறு
Transport operators போக்குவரத்து நிறுவனத்தினர்
Transport subsidy போக்குவரத்து நிதியுதவி
Travel fair பயணக் கண்காட்சி
Travel restrictions பயணக் கட்டுப்பாடுகள்
Travel warning பயணம் பற்றிய எச்சரிக்கை
Treason நாட்டு நிந்தனை / தேச துரோகம்
Treasure hunt புதையல் வேட்டை
Treasury கருவூலம்
Treated water தூய்மைப்படுத்தப்பட்ட நீர் / சுத்திகரிக்கப்பட்ட நீர்
Treaty of amity and cooperation நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம்
Tremendous பேரளவிலான / மகத்தான / பிரமாண்டமான
Trespass அத்துமீறி நுழைவது
Trial adjourned வழக்கு ஒத்திவைப்பு
Triangle முக்கோணம்
Triathlon மூவகைப் போட்டி
Tribal region பழங்குடி வட்டாரம்
Trilateral partnership முத்தரப்புப் பங்காளித்துவம்
Tripartite partners முத்தரப்புப் பங்காளிகள்
Tripartite task force முத்தரப்புப் பணிக் குழு
Triple jump தாவிக்குதித்துத் தாண்டுதல்
Tropical countries வெப்பமண்டல நாடுகள்
Trouble shooter பிரச்சினை தீர்ப்பவர் / சிக்கலைத் தீர்ப்பவர்
Truce / ceasefire சண்டைநிறுத்தம் / தற்காலிகப் போர் நிறுத்தம்
Trustee அறங்காவலர்
Trust fund பொறுப்பு நிதி / அறக்கட்டளை நிதி
Tumultuous period குழப்பமான காலக்கட்டம்
Turbulent politics கொந்தளிப்பான அரசியல் சூழல்
Turning point திருப்புமுனை
Tv ratings system தொலைக்காட்சி ரசிகர் எண்ணிக்கைக் குறியீடு
Twists and turns திருப்பங்கள்
Two-thirds majority மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
Two-tier family இரண்டு தலைமுறைக் குடும்பம்
Back To Top