Alphabetical List

S
Englishதமிழ்
Sabotage நாச வேலை / அழிவு வேலை
Sabre-rattling வாய்ச்சொல் மிரட்டல் / மிரட்டல் நடவடிக்கை
Saf day சிங்கப்பூர் ஆயுதப்படை தினம்
Safe environment பாதுகாப்பான சுற்றுப்புறம் / பாதுகாப்பான சுற்றுச்சூழல்
Safety lapse பாதுகாப்பில் கவனக் குறைபாடு
Safety officer பாதுகாப்பு அதிகாரி
Safety precaution பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
Safety precautionary measures பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Safety requirements பாதுகாப்புத் தேவைகள்
Safety review பாதுகாப்பு மறு ஆய்வு
Safety standards பாதுகாப்புத் தரநிலைகள்
Safety violation பாதுகாப்பு விதிமீறல்
Salvation army இரட்சண்ய சேனை / இரட்சண்யப் படை
Samaritans of singapore (sos) சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம்
Sanction ஒப்புதல் ஆணை / இசைவாணை / மேலிட ஒப்புதல்
Sanctions தடை உத்தரவுகள்
Sand quarry மணல் ஆலை / மணல் அகழ்களம்
Satellite துணைக்கோள்
Satellite technology துணைக்கோளத் தொழில்நுட்பம்
Satellite towns துணை நகரங்கள்
Scaffolding சாரக்கட்டு
Scan கூர்ந்து பார்த்தல், நுண்ணாய்வு நோக்கு
Scanned copy ஊடுகதிர்ப் பரிசோதனை/ ஊடுகதிர்ச் சோதனை
Scanner வருடிநகலி /நுண்ணாய்வுக் கருவி
Scant progress சொற்ப முன்னேற்றம்
Scheduled weapons சட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்கள்
Scholarship கல்வி உதவிச் சம்பளம் / கல்வி உபகாரச் சம்பளம்
Scholastic assessment test ஆழ்திறன் மதிப்பீட்டுச் சோதனை
School admission system மாணவர் சேர்க்கை முறை
School cluster பள்ளிக் குழுமம்
School health service பள்ளிச் சுகாதாரச் சேவை
School ranking system பள்ளித் தரவரிசை முறை
Science centre அறிவியல் நிலையம்
Science council அறிவியல் மன்றம்
Science park அறிவியல் பூங்கா
Scientific community அறிவியல் சமூகம்
Scorching heat சுட்டெரிக்கும் வெயில்
Seabed கடற்படுகை
Seaborne கடல்வழி
Sea change மிகப் பெரிய உருமாற்றம் / கடலால் ஏற்படும் மாற்றம்
Sea level கடல் மட்டம்
Search and rescue operation தேடல், மீட்பு நடவடிக்கை
Seasoned politician பழுத்த அரசியல்வாதி
Seat sharing (election) இட ஒதுக்கீடு / தொகுதிப் பங்கீடு
Secondment இடைக்காலப் பணியிட மாற்று நியமனம்
Second term இரண்டாம் தவணை
Secretariat செயலகம்
Secretary-general தலைமைச் செயலாளர்
Secretary of state (usa) வெளியுறவு அமைச்சர் (அமெரிக்கா)
Sectarian war இனப்பூசல் / போர்
Secular சமயச் சார்பற்ற
Secular consideration சமயச் சார்பற்ற பரிசீலனை
Secularism சமயச் சார்பற்ற கோட்பாடு
Securities & futures  act பங்கு, வருநிலை வர்த்தகச் சட்டம்
Securities investors association பங்கு கடன்பத்திர முதலீட்டாளர் சங்கம்
Security breach பாதுகாப்பு விதி மீறல்
Security concerns பாதுகாப்புப் பற்றிய கவலை / பாதுகாப்புப் பற்றிய அக்கறை
Security conference பாதுகாப்பு மாநாடு
Security council (un) பாதுகாப்பு மன்றம் (ஐநா)
Security crackdown பாதுகாப்புக்கான கடும்நடவடிக்கை /
Security industry பாதுகாவல் தொழில்துறை
Security initiative பாதுகாப்புச் செயல்திட்டம் / பாதுகாப்பு ஏற்பாடு
Security threat பாதுகாப்பு மிரட்டல்
Seeded player தரவரிசைப்படுத்தப்பட்ட ஆட்டக்காரர்
Seed funding ஆரம்ப நிதியுதவி
Seizure கைப்பற்றுதல் / மூளை-இதயம் திடீரெனத் தாக்கப்படுதல்
Selection rounds தேர்வுச் சுற்றுகள் / தெரிவுச் சுற்றுகள்
Self-control சுயகட்டுப்பாடு / தற்கட்டுப்பாடு
Self-employment சுயதொழில்
Self-help group சுய உதவிக் குழு
Self-reliance தற்சார்பு
Self-rule தன்னாட்சி
Semester கல்விப் பருவம்
Semi-conductor பகுதி மின்கடத்தி
Senior counsel மூத்த வழக்கறிஞர்
Senior minister of state மூத்த துணையமைச்சர்
Sense of duty கடமையுணர்வு
Sensitive கூருணர்வு / உணர்வுபூர்வ / புண்படுத்தக்கூடிய
Sentence (law) தண்டனை (சட்டம்)
Separatist faction பிரிவினைவாதத் தரப்பு
Separatists பிரிவினைவாதிகள் / பிரிவினையாளர்கள்
Separatist violence பிரிவினைவாத வன்செயல்
Service sector சேவைத் துறை
Service standards சேவைத் தரநிலைகள்
Severe challenges கடும் சவால்கள்
Severe consequence கடும் விளைவு
Severely weakened மிகமோசமாக நலிவடைதல் / மிகமோசமாக பலவீனமடைதல்
Severity of charges குற்றச்சாட்டுகளின் கடுமை
Sewer பாதாளச் சாக்கடை
Sexual behaviour பாலியல் நடத்தை
Shared border பொது எல்லை
Shareware (computer) பகிர்வு மென்பொருள்
Shooting (game) துப்பாக்கி சுடும் போட்டி (விளையாட்டு)
Shore up support ஆதரவு திரட்டுதல்
Short message service (sms) குறுந்தகவல் சேவை
Shot put குண்டெறிதல் (விளையாட்டு)
Shrewd campaigning சாதுர்யமான பிரசாரம்
Shuttle bus இடைவழிப் பேருந்து
Siege முற்றுகை
Significant change குறிப்பிடத்தக்க மாற்றம்
Significant proposals குறிப்பிடத்தக்க முன்மொழிவுகள்
Signs of violence வன்முறை அறிகுறிகள்
Silent march அமைதி ஊர்வலம்
Silver jubilee வெள்ளி விழா
Simple majority சாதாரண பெரும்பான்மை
Simulated blasts பாவனை வெடிப்புகள்
Simultaneous explosions ஏகநேர வெடிப்புகள் / ஒரே நேரத்தில் நிகழும் வெடிப்புகள்
Singapore council of women's organisations சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம்
Singapore disability sports council சிங்கப்பூர் உடற்குறையுடையோர் விளையாட்டு மன்றம், மாற்றுதிறனாளிகள் விளையாட்டு மன்றம்
Singapore discovery centre சிங்கப்பூரை அறிவோம் நிலையம்
Singapore environmental achievement award சிங்கப்பூர்ச் சுற்றுப்புறவியல் சாதனை விருது
Singapore exchange (sgx) சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை
Singapore indian development association (sinda) சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா)
Singapore kindness movement (skm) சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம்
Singapore management university சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம்
Singapore spirit சிங்கப்பூர் உணர்வு
Singapore sports school சிங்கப்பூர் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி
Single constituency தனித்தொகுதி
Site supervisor தள மேற்பார்வையாளர் / வேலையிட மேற்பார்வையாளர்
Six-party talks ஆறு தரப்புப் பேச்சு
Skills shortage திறன் பற்றாக்குறை
Sky diving வான்குடைசாகசம்
Sleazy character இழிந்த நடத்தையுள்ளவர் / ஒழுக்கக் கேடர்
Sleepers (railway track) தாங்குகட்டைகள் / குறுக்குச் சட்டங்கள் (தண்டவாளம்)
Slim majority குறுகிய பெரும்பான்மை / சொற்பப் பெரும்பான்மை
Slimming centre உடல் எடை குறைப்பு நிலையம்
Slogan முழக்கவரி / முழக்கவாசகம்
Slum area சேரிப் பகுதி
Smartcard பலபயன் அட்டை
Smart phone திறன்பேசி
Snap election திடீர்த் தேர்தல்
Snapshot சாராம்சம் / சுருக்கம், நொடி நிழற்படம்
Sniffer dog மோப்பநாய்
Snow-skiing பனிச்சறுக்கு
Soccer hooligans காற்பந்தாட்ட வீணர்கள் / காற்பந்தாட்ட போக்கிரிகள்
Social evolution சமூகப் பரிணாம வளர்ச்சி
Social ills சமூகச் சீர்கேடுகள்
Social service programmes சமூக சேவைத் திட்டங்கள்
Social service training institute சமூக சேவைப் பயிற்சிக் கழகம்
Social stability சமூக நிலைத்தன்மை
Social visit pass குடிநுழைவு வருகை அனுமதி
Social welfare centre சமூக நல நிலையம்
Social worker award சமூகப் பணியாளர் விருது
Society for the physically disabled உடற்குறையுள்ளோர் சங்கம் / மாற்றுத் திறனாளிகள் சங்கம்
Sociology சமூகவியல்
Soft drink குளிர்பானம்
Software மென்பொருள்
Software glitch மென்பொருள் கோளாறு
Soil movement நில அசைவு
Solar energy சூரிய சக்தி
Solar system சூரிய மண்டலம்
Solicitor-general அரசாங்கத் தலைமை வழக்கறிஞர்
Solid economic policies வலுவான பொருளியல் கொள்கைகள்
Solid progress உறுதியான முன்னேற்றம் / உறுதியான வளர்ச்சி
Sow hatred வெறுப்பை விதைத்தல்
Space shuttle விணகலம்
Space station விண்வெளி மேடை
Spam வேண்டாத மின்னஞ்சல் / தேவையற்ற மின்னஞ்சல்
Speaker of parliament நாடாளுமன்ற நாயகர்
Speakers' corner பேச்சாளர் சதுக்கம்
Special account (cpf) சிறப்புக் கணக்கு (மத்திய சேமநிதி)
Special assembly சிறப்புக் கூட்டம்
Special court சிறப்பு நீதிமன்றம் / தனி நீதிமன்றம்
Specially designed சிறப்பாக வடிவமைக்கப்பட்ட
Special privilege சிறப்புச் சலுகை / தனிச்சலுகை
Special squad சிறப்புப் படை / தனிப்படை
Specific reprisal குறிப்பிட்ட பழிவாங்கும் நடவடிக்கை
Speed warning device வேக எச்சரிக்கைக் கருவி
Spinal column முதுகுத் தண்டு / தண்டு வடம்
Spin bowler (cricket) சுழற்பந்து வீச்சாளர் (கிரிக்கெட்)
Spiritual leader ஆன்மீகத் தலைவர்
Spiritual tour ஆன்மீகச் சுற்றுலா
Spleen மண்ணீரல், சினம்/வெறுப்பு
Spoken tamil பேச்சுத்தமிழ்
Sponsors of terrorism பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்கள்
Sporadic violence அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மூளும் வன்செயல்
Sports excellence programme விளையாட்டுத்துறை உன்னதத் திட்டம்
Sports facility விளையாட்டு இடவசதி
Sports hub விளையாட்டு நடுவம்
Sprawling archipelago பரந்து விரிந்த தீவுக்கூட்டம்
Spying scheme வேவு பார்க்கும் திட்டம்
Spy satellite வேவு பார்க்கும் செயற்கைக்கோள்
Squash சுவர்ப்பந்து
Stability pact நிலைத்தன்மைக்கான உடன்பாடு
Stable production நிலையான உற்பத்தி
Stagflation தேக்கமுற்ற பணவீக்கம்
Stagnant economy தேக்கமடைந்த பொருளியல்
Stagnant industry தேக்கமடைந்த தொழில்துறை
Stalled negotiation தடைப்பட்ட பேச்சு / முட்டுப்பட்டுள்ள பேச்சு
Stampede நெருக்கியடித்து ஓடுதல் / முண்டியடித்து ஓடுதல்
Standard of living வாழ்க்கைத் தரம்
Standby credit அவசரத் தேவைக்கு உதவும் கடன்
Standing order நிலையாணை
Start anew புதிய தொடக்கம்
State assembly மாநிலச் சட்டமன்றம்
State election மாநிலத் தேர்தல்
State funeral அரசாங்க மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கு
Statement அறிக்கை
Statement to police விசாரணை வாக்குமூலம்
State of alert விழிப்புநிலை
State of emergency நெருக்கடி நிலை / அவசரகால நிலை
State-of-the-art அதிநவீன
Statistics புள்ளி விவரங்கள்
Super powers வல்லரசு நாடுகள்
Back To Top